சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.35 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.30 ஆகவும் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் நவம்பர் மாத இறுதியில், டிசம்பர் மாத தொடக்கத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இதன் காரணமாக காய்கறி பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் மொத்த விலையில் ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.35 ஆகவும், ரூ.45-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் ரூ.30 ஆகவும் குறைந்துள்ளது. சாம்பார் வெங்காயமும் ரூ.30-க்கு கிடைத்து வருகிறது.