பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன.
இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது.