ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் குளத்தில் மீன்களை வேட்டையாடுவதற்காக நீர்க்காகங்கள் அதிகளவில் முகாமிடுகின்றன. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரின் மையப் பகுதியில் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இவைகளை வேட்டையாடி தின்பதற்கான ஏராளமான நீர்க்காகங்கள் குளத்திற்கு வருகின்றன. மீன்களை வேட்டையாடி விட்டு குளத்தின் மைய மண்டபத்தில் உள்ள பகல் முழுவதும் முகாமிடுகின்றன.
இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘அதிகாலையிலேயே ஏராளமான நீர்க்காகங்கள் வந்து குளத்தின் மைய மண்டபத்தில் முகாமிடுகின்றன. குளத்தில் ஆட்கள் பகுதிக்குச் சென்று பகல் முழுவதும் மீன்களை வேட்டையாடுகின்றன. பின்னர் மைய மண்டபத்திற்கு வந்து ஓய்வெடுக்கின்றன. இந்த காக்கைகளை அந்த வழியாகச் செல்வோர் பார்த்து ரசித்துவிட்டு செல்கின்றனர்.
The post கோயில் குளத்தில் மீன்களை வேட்டையாடும் நீர்க்காகங்கள் appeared first on Dinakaran.