தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படம் பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இப்படத்தினை சூர்யா பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு பூங்கொத்து அனுப்பி பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை படக்குழுவினர் பலர் தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் ராம் ஜெகதீஷ், தயாரிப்பாளர் பிரசாந்தி, தயாரிப்பாளர் நானி, ப்ரியதர்ஷி, சிவாஜி, ரோகிணி, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி மற்றும் சாய் குமார் ஆகியோருக்கு சூர்யா தரப்பில் இருந்து பூங்கொத்து அனுப்பப்பட்டுள்ளது.