‘கதைத் திருட்டு’ என்ற விவகாரம் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின. அப்படிப்பட்ட ஒரு வழக்கு தான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான ‘கதைத் திருட்டு’ வழக்கு.