ஆர்சிபி அணியின் வழிகாட்டியான தினேஷ் கார்த்திக் கூறும்போது, “விராட் கோலி இப்போது கூட ஒருவகையான ஷாட்டில் பயிற்சி கொள்ள விரும்புகிறார். இந்த நேரத்தில் இன்னொரு ஷாட்டில் ஒர்க் செய்வது அவரோட மனதில் இருக்கும் பசியை உணர்த்துகிறது. அவர், ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர், சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றில் விராட் கோலி சிறப்பாக ரன்கள் குவித்துள்ளார். எப்போதும் போலவே இம்முறையும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்’‘ என்றார்.