நாடு முழுவதும் இந்த ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், வேலையும், ஊதியமும் இன்றி அவதிப்படுகின்றனர். கோவையில்தான் அதிகளவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், என்டிசி நிர்வாக அதிகாரிகள் பதிலளிக்க மறுக்கின்றனர்.