கோவை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (பிப்.25) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக உள்ளார். இதற்கு முன்பு 2016-21 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் சுண்டக்காமுத்தூர் சாலை மூன்றாவது வீதி, திரு நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.