அவிநாசி: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, அவிநாசியில் வரும் ஏப்.2-ம் தேதி விசைத்தறியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இன்று (மார்ச் 27) அறிவித்துள்ளனர்.
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அவிநாசி சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். சோமனூர் சங்கத் தலைவர் பூபதி, தெக்கலூர் சங்க செயாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த, 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். இனி ஒப்பந்தப்படி கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும்.