கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்த விவகாரத்தில், பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக கூட்டணி குற்றம் சாட்டும் நிலையில், குளறுபடிகளுக்கு திமுகவே காரணம் என அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் மூன்று கட்சிகளுமே மக்களை ஏமாற்றுவதாக சில அமைப்புகள் கூறுகின்றன.

