சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன் பேசுகையில் “பெள்ளாச்சி தொகுதி, பாலக்கரை பகுதியில் உள்ள புதிய காலனியில் குடிநீர் பிரச்சனை உள்ளது” என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சனை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக ஒரு சில பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை குடிநீர் வருவாக கூறி உள்ளனர். எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் நகராட்சி நிர்வாகம் , குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மூலம் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.
The post கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.