2027-ம் ஆண்டு பொங்கலுக்கு ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ 2-ம் பாகம் வெளியாகும் என்று நடிகர் வெங்கடேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’. உலகளவில் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தினை இப்படம் தில் ராஜுவுக்கு ஈடுகட்டி இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை பல்வேறு வகையில் படக்குழு கொண்டாடி வருகிறது.