மாணவர் ஒருவர் பேசிய பேச்சு வைரலாகிவிட்டது. நேபாளத்தில் உள்ள ஹோலி பெல் பள்ளியில் கடந்த வாரம் ஆண்டு விழா. அங்கு பேசிய மாணவர் பெயர் அபிஸ்கர் ரவுத். ‘‘புதிய நேபாளத்தை உருவாக்க இங்கு பல கனவுகளுடன் உங்கள் முன் நிற்கிறேன். நம்பிக்கை, ஆர்வம் என்ற நெருப்பு எனக்குள் எரிகிறது. ஆனால், என் இதயம் கனக்கிறது. ஏனெனில், அந்த கனவுகள் கைநழுவி போகுமோ என்ற அச்சம்.
இந்த நாட்டில் பிறந்தோம். நம்மை வளர்த்த இந்த நேபாளத் தாய்க்கு என்ன செய்தோம். இந்த தாய் திருப்பி என்ன கேட்கிறது? நேர்மை, கடின உழைப்பு, நமது பங்களிப்பு… அவ்வளவுதான். ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். வேலை வாய்ப்பின்மை, அரசியல் கட்சிகளின் சுயநல விளையாட்டு, ஊழல் போன்ற சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறோம். ஊழல் நமது எதிர்காலத்தின் ஒளியை அணைத்துவிடும் ஒரு வலையைப் பின்னியுள்ளது’’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.