சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை அடுத்து இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ என்ற படத்தை இயக்கி யுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும் என்று கூறப் படுகிறது.
இதையடுத்து சசி இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா நடிக்கிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.