மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிசிசிஐ-யின் வருடாந்திர விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.