புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொடுமைக்கு பின்னணியில் பலர் இருப்பதாக மருத்துவர்களும், அந்தப் பெண்ணின் பெற்றோரும் கூறிவந்தனர். அத்துடன் மாநிலம் தழுவிய அளவில் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களு
டன் முதல்வர் மம்தா பானர்ஜி பல முறை பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் முடியவில்லை. பின்னர் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.