சென்னை: சென்னை திருவிக நகரில் 3 சிறுமிகளை 3 பேர், காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்தி. சட்டங்களை கடுமையாக்குவதாக கூறினால் மட்டும் போதாது, அவற்றை செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் .
இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post சட்டங்களை கடுமையாக்குவதாக கூறினால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.