திருப்புவனம்: காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுகின்றனர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:காவல் துறையினர் சட்டப்படி செயல்படாமல், கொடூரமான முறையில் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.