
சென்னை: சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததை அடுத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடின்றி அனைவரிடமும் அன்போடு அமைதியோடு பேசக்கூடியவர். அவர் கோபமாகப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை.

