சென்னை: பெரும் தொகையை முதலீடு செய்து கட்டுமானங்களை எழுப்பிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக சட்டவிரோதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், தி.நகரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக கட்டிடத்தை 8 வாரங்களில் இடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் தரைத்தளத்துடன் கூடிய மூன்று தளங்களுக்கு அனுமதி பெற்றுவிட்டு 10 தளங்கள் கட்டிய தனியார் கட்டுமான நிறுவனம், அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக கட்டிடத்தை இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.