டாக்கா: வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டம் காரணமாக பதவி விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த யூனுஸ் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஷேக் ஹசீனா மீது சட்டவிரோத நில அபகரிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 17 பேருக்கு எதிராக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ஷேக் ரெஹானாவின் மகளும், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினருமான துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சட்டவிரோத நில அபகரிப்பு புகார் ஷேக் ஹசீனா, பிரிட்டிஷ் எம்பிக்கு எதிராக கைது வாரண்ட்: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.