வத்திராயிருப்பு: கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலிலுக்கு செல்ல வரும் 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள், வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கக் கூடாது, இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சதுரகிரி செல்ல 4 நாள் அனுமதி appeared first on Dinakaran.