வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு தற்போது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் சதுரகிரி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் மலையேறி சென்றனர். இதில் காணிப்பாறை கருப்பசாமி கோயில் அருகே வழுக்குப்பாறையில் புதுச்சேரியை சேர்ந்த ராஜ்குமார்(33) தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதேபோல கோரக்கர் குகை அருகே மற்றொருவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post சதுரகிரி மலையில் தவறி விழுந்து 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.