பஸ்தர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றம் கான்கெர் மாவட்டங்களில் இன்று நடந்த என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பஸ்தர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக விரிவான நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டது. பிஜாப்பூர் – தண்டேவாடா எல்லைப் பகுதியில் இருந்து 26 நக்ஸலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையில் ஏகே-47 ரக துப்பாக்கிகள், தானாக இயங்கும் ஆயுதங்கள், பகுதி அளவில் தானாக இயங்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மோதலில், மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் கொல்லப்பட்டார்.