புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் – தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.