காரியாபந்த்: சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர்.
முன்னதாக திங்கள்கிழமை நடந்த தாக்குதலில், இரண்டு பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், ஒரு கோப்ரா வீரர் காயமடைந்தார் என்று தெரிவித்திருந்தனர். போலீஸ் அதிகாரிகள் மீண்டும் கூறுகையில், "சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலத்தின் எல்லையில் உள்ள மெயின்பூர் காவல்நிலைய எல்லைப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ரூ.1 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம்.