பீஜப்பூர்: சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் அமைப்பின் கமாண்டோ பிரிவினர் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் உசூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்மெட்லா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 7 மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.