சுக்மா: சத்தீஸ்கரில் நேற்று 42 பெண்கள் உட்பட 77 நக்சலைட்கள் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். நக்சல் அபாயம் உள்ள மாநிலங்களில் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்கள் ஒழிக்கப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து நக்சலைட்கள் சரணடைவதும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் தலைவர் சோனு சரண் தலைமையில், 60 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.