புதுடெல்லி: சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தரவில், “மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவுகளின் போது சில கருத்துகள் கோபமூட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து மற்றும் மதக்கலவரமும் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. இதைவிடுத்து சிறுபான்மையினருக்கான அரசு திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கலாம். எனவே, மசூதிகள் மற்றும் தர்காக்களில் எல்லை மீறுவதை வக்பு வாரியம் விரும்ப
வில்லை” என்று தெரிவித்து உள்ளார்.