புதுடெல்லி: சந்தைகள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல பலருக்கும் வேலை செய்ய வேண்டும் என்பதை இந்திய போட்டி ஆணையம் உறுதிப்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) 16-வது ஆண்டு தின விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் வர்த்தகத்தில் சுதந்திரமான சந்தை செயல்பாட்டை பாதுகாப்பதற்கு போட்டி கண்காணிப்பு அமைப்புகளுக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.