பழநி: “சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்” என்று பழநியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.24) மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி. திருப்பரங்குன்றம் மலையின் படிகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டவர்களை அரசு எப்படி அனுமதித்தது? சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.