பொள்ளாச்சி: சபரிமலை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு இன்று கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்தது. மாடுகள் விற்பனையும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. பொள்ளாச்சி மாட்டு சந்தையில் கடந்த சில வராமாக, உள்ளூர் மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும், ஆந்திர உள்ளிட்ட வெளிமாநில மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் சபரிமலை சீசன் காரணமாக கேரள வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது.
மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று நடந்த சந்தையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து ஓரளவு இருந்தாலும், 1 மாதத்திற்கு பிறகு ஆந்திர மாடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்று சந்தைக்கு 1500க்கும் அதிகமான மாடுகள் வந்திருந்தது. சபரிமலை சீசன் நிறைவடைந்ததையொட்டி மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால், சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மாடுகள் வரத்து குறைந்தாலும், கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையான காளை மாடு இன்று ரூ.45ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ. 55ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.35 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடு ரூ. 60 ஆயிரம் வரை என கடந்த வாரத்தைவிட கூடுதல் விலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post சபரிமலை சீசன் நிறைவு: பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.