புதுடெல்லி: "இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் சிறிது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு, பின்னர் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.