வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டி, 102 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,683 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 8,607 ரன்களும், சர்வதேச டி 20 போட்டிகளில் 1,909 ரன்களும் சேர்த்திருந்தார். இந்நிலையில் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு சமாவோ அணிக்காக களமிறங்க முடிவு செய்துள்ளார் 41 வயதான ராஸ் டெய்லர்.