திருவனந்தபுரம்: “சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால், அதுவே மூல காரணம் என சொல்லிவிட முடியாது” என மத்திய இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம், ‘சமூகத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு சினிமாவின் பங்கு என்ன?’ என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “திரைப்படங்களில் வன்முறையைக் காட்டக் கூடாது அல்லது அதைக் குறைக்க வேண்டும் என்று சொல்வதைவிட, அதில் காட்டப்படுவது எதுவும் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். சமூகத்தில் நடக்கும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அதுவே சமூகத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு மூல காரணம் என சொல்லிவிட முடியாது” என்றார்.