“சிலர் என்னிடம், ‘நீங்கள் மிகவும் குண்டாக இருக்கிறீர்கள். ஸ்கர்ட் அணியாதீர்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நான் கண்டுகொள்வதில்லை” என்கிறார் நயோமி வாடனபே, ஜப்பானின் நகைச்சுவை நட்சத்திரம் மற்றும் ஃபேஷன் ஐகான். 2008இல், தனது வைரலான பியோன்சே தோற்றத்தால் இவர் புகழ் பெற்றார். இதனால் அவருக்கு ‘ஜப்பானிய பியோன்சே’ என்ற பெயர் கிடைத்தது. இவரை 1 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.