சம்பல்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்த பழமையான ’பஸ்ம சங்கா்’ (ஸ்ரீ கார்த்திக் மகாதேவ்) கோயில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கடந்த 13-ம் தேதி மீண்டும் பூஜை செய்து கோயில் திறக்கப்பட்டது. கக்கு சராய் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கல்கி விஷ்ணு கோவிலில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இந்தக் கோயில் கடந்த மாதம் கலவரம் ஏற்பட்ட முகாலயர் காலத்தைச் சேர்ந்த ஷாஹி ஜாமா மசூதி இருக்கும் பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.