மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் தாக்குதல் சம்பவத்தில் குற்றக்காட்சியை மீண்டும் உருவாக்க கைது செய்யப்பட்டிருக்கும் குற்றம்சாட்டப்படவரை போலீஸார் நடிகரின் வீட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அழைத்துச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,"இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 20 பேர் அடங்கிய போலீஸ் குழு, குற்றம்சாட்டப்பட்ட நபரை சயிப் அலிகானின் இல்லமான சத்குரு ஷரன்-க்கு அழைத்து சென்றது. அங்கு அந்தகுழு ஒரு மணிநேரம் வரை இருந்தது.