‘சர்தார் 2’ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமான யுவன் சங்கர் ராஜா மாற்றப்பட்டு சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார்.
‘சர்தார் 2’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தாகி இருந்தார் யுவன். தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருகிறார். இதன் முதல் பாகத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.