டெல் அவிவ்: தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அவர் மட்டுமல்லாது இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.