சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முக்கிய பங்கை வகிக்கும் என டிஎச்எல் மற்றும் நியூயார்க் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் கணிசமான பங்கு இந்தியாவினுடையதாக இருக்கும். சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் இந்தியா 6 சதவீத பங்களிப்பை வழங்கி மூன்றாவது மிகப்பெரிய நாடாக திகழும். அதற்கு முன்பாக, சீனா 12 சதவீத பங்கையும், அமெரிக்கா 10 சதவீத பங்கையும் வழங்கி இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைக்கும்.