புதுடெல்லி: சவுதி அரேபியாவின் ஒரே ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி முடிவுகளை ஒருசேர எடுத்து வருகிறார். குறிப்பாக, உக்ரைன் போர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் வீடியோ கால் மூலம் உரையாற்றினார்.