சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி உட்பட சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை கதை சினிமாவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் சேர்மனுமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதையும் திரைப்படமாகிறது.
கங்குலியின் கதாபாத்திரத்துக்கு ஆயுஷ்மான் குர்ரானா, ரன்பீர் கபூர் உட்பட சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜ்குமார் ராவ் நடிக்க இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்குத் தெரிந்தவரை ராஜ்குமார் ராவ், முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார். கால்ஷீட் பிரச்சினை இருப்பதால் படம் தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகலாம்” என்றார்.