திருநெல்வேலி: “திமுகவை ஒழித்துக் கட்டவேண்டும் என்று சிலர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும், செருப்பு அணிய மாட்டேன் என்று கூறிக்கொண்டு செயல்பட்டாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், டி.பி.எம் மைதீன்கான், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 தொகுதிகளை வென்றோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளையும் வெல்வது உறுதி. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரை வெற்றி பெற செய்யவேண்டும்.