இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘நான் ஆணையிட்டால்’ என்ற டேக் லைன் உடன் தன் கையில் உள்ள சாட்டையை விஜய் சுழற்றுவது போல இந்த செகண்ட் லுக் போஸ்டர் உள்ளது. இது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் நடிகர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் அரசியல் கதைக்களத்தை பின்னணியாக கொண்டது என்பது இந்த போஸடரிலும் உறுதி ஆகிறது.