
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் பகுதி யில் நாட்டின் மிகப் பெரிய மொத்தவிலை மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் 4 லட்சம் பேர் வருவர். தினமும் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில், சாந்தினி சவுக் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்குப்பின் இப்பகுதியில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரித்தது.

