ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பார்மில் இல்லை. இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என இழந்தது. அதேவேளையில் இரு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் 0-2 என படுதோல்வி கண்டிருந்தது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணி எந்தவிதமான ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லவில்லை.