மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ல் நியூஸிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி பங்கேற்கும் இந்த ஆட்டங்கள் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக்குழுவினர் நேற்று மும்பையில் அறிவித்தனர். இதே அணியே இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மட்டும் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெறுகிறது. கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்கிறார். துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.