கராச்சி: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் விலகியுள்ளார்.
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி முதல் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப்புக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.