திருச்சி: சாரண, சாரணியர் இயக்கம் உலகப் பெரும் இயக்கங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் 80 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 12 லட்சம் பேரும் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10,12ம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.கற்றல் மற்றும் பயிற்றுவித்தலை எளிமையாக்க, நவீனமாக்க 80,000 ஆசிரியர்களுக்கு கை கணினி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்; பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டுக்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. நாளைய குடிமக்களான மாணவர்களிடம் சமூக சேவை, உற்று நோக்குதல் ஏற்படுத்துகிறது” என மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post சாரண, சாரணியர் இயக்கம் உலகப் பெரும் இயக்கங்களில் ஒன்றாக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.